இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.
Category: மாவட்ட செய்திகள்
புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team
விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்
இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்
இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட… Continue reading இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்
நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு
இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team