ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி,… Continue reading ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

இராமநாதபுரம் | செப் 27 - 2019 தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் உப்பூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி கொதி கலன்கள் அமைக்கும் பணிகளை பெல் (BHEL) நிறுவனம் துவங்கியுள்ளது. ₹12655 கோடி மதிப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் 2016 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட உப்பூர் அனல் மின்நிலையப் பணிகளை 2019 டிசம்பர் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மின் நிலையத்திற்கு 359… Continue reading உப்பூர் அனல் மின் நிலையத்தில் கொதி‌கலன்கள் அமைக்கும் பணி தீவிரம்.

மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

இராமநாதபுரம் | செப் 27 ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள்… Continue reading மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team

விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட… Continue reading இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்