தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸா

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

தொண்டி இறைமறை இயக்கம் நடத்தும் தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மத்ரஸா தளத்தில் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இறைமறை இயக்கம் நடத்தும் தர்பியத்துல் அத்ஃபால் தீனியாத் மக்தப் மதரஸாவின் 30 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் போட்டி.

அண்ணலாரை அறிவோம்

[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை ]

இன்ஷா அல்லாஹ் 15 12 2019 அன்று நடைபெற உள்ள கேள்வி பதில் தேர்வில் கலந்து கொடுக்கப்படும் வினாத்தாளில் 50 கேள்விகளுக்கும் சரியான பதிலை தெரிவு செய்யும் தாய்மார்களுக்கு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 1 1 2020 அன்று நடைபெற உள்ள ஆண்டுவிழாவில் சிறப்பான பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.

போட்டி விதிமுறைகள்

தேர்வில் கேள்விகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள காலகட்டங்களில் இருந்து கேட்கப்படும்.

கேள்விகள் ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கும்

தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்

தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தாய்மார்கள் சகோதரிகள் தங்களது பெயர்களை +91 8838782004 ( https://wa.me/918838782004 ) எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தோ அல்லது mythondi.com/deeniyat என்ற இணையதளத்தில் சென்றோ பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது நேரடியாக நமதூர் பள்ளிவாசல் இமாம்களிடம் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பெயர்களை பதிவு செய்யும் தாய்மார்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.

பெயர் பதிவு செய்ய கடைசி நாள் : 5-12-2019

குறிப்பு

போட்டியாளர்கள் தயார் செய்ய வேண்டிய நபியவர்களின் வாழ்க்கையின் முக்கியமான சில தலைப்புகள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்ப பாரம்பரியம் மற்றும் அவர்களின் பெற்றோர்.

நபியவர்களின் பிறப்பு

சிறு வயது வாழ்க்கை

இளமைப்பருவ வாழ்க்கையை

வியாபாரம்

முதல் திருமணத்திற்கு முன் நடந்த அற்புதங்கள்.

திருமண வாழ்க்கை

நபித்துவம் கிடைக்கப் பெறுதல்

நபியவர்களின் குழந்தைகள்

நபியவர்களின் மனைவிமார்கள்

மக்காவில் வாழ்ந்த காலங்கள்

மக்காவில் நண்பர்கள் எதிரிகள்

ஹிஜ்ரத்

மதீனா வாழ்க்கை

மதினாவின் ஆரம்ப கால கட்டம்

நபியவர்களின் எளிமை

முதல் இஸ்லாமிய போர்

நபியவர்களே கலந்து கொண்ட போர்ககள்

நபியவர்களின் இஸ்லாமிய அழைப்பு கடிதங்கள்

இஸ்லாமிய அழைப்பு பணி

நபியவர்களை சந்திக்க வந்த வெளிநாட்டு தூதுவர்கள்

நபியவர்களின் முக்கிய தோழர்கள்

முக்கியமான வரலாற்று நிகழ்வுகள்

தொழுகை போன்ற வணக்கங்கள் கடமையாக்கப்பட்ட சூழ்நிலைகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகள் இறப்பு

நபியவர்களின் மனைவியர் இறப்பு

நபியவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம்

நபியவர்களின் குடும்பம் பிள்ளைகள்

நபியவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் நோய்கள்.

நபியவர்களின் மக்கா பயணங்கள்.

நபியவர்களின் ஹஜ் பயணம்.

நபியவர்கள் கடைசி காலங்கள்.

நபியவர்களின் வஃபாத்

நபியவர்களை அடக்கம் செய்தல்

ஆகிய தலைப்புகளில் இருந்து போட்டியாளர்கள் தயார் செய்து கொள்ளலாம்.

ஆதாரப்பூர்வமான வரலாற்று குறிப்புகளை பெற அர் ரஹீக் அல் மக்தூம் (தமிழில் தாருல் ஹுதா வெளியீடு)

ஸஹீஹ் புகாரி

ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மற்றும் வரலாற்று நூல்களில் இருந்தும் போட்டியாளர்கள் வரலாற்றை படித்து கொள்ளலாம்.