பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் :- மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் 100 விசைப்படகுகள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு படகுக்கும் அரசால் மாதம் தோறும் 1500 லிட்டர் மானிய டீசல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலுள்ள 10 இரும்பு படகுகளுக்கு மட்டும் மானிய டீசல் வழங்கப்படவில்லை. விசைப் படகுகளில் 10 படகுகள் இரும்பால் ஆன படகுகளாக உள்ளதால் அந்த படகுகளுக்கு மட்டும் அரசால் வழங்கப்பட்டு வரும் மானிய… Continue reading மானிய டீசல் வழங்ககோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.

இராமநாதபுரம் | அக் 02 - 2019 நமது பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு நவாஸ் கனி அவர்கள் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாக தொகுதி முழுவதும் உள்ள இளைஞர்களை இணைத்து அதன் மூலம் பொது சமூக பணிகளை முன்னெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் இதுபற்றி கூறக்கூடிய காணொளி உங்களுக்காக.. தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர் விவரங்களை +91 90139 97380… Continue reading இராமநாதபுரத்தை மேம்படுத்த நவாஸ் கனி அவர்களோடு கை கோர்ப்போம்.

தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்

தேவகோட்டை | செப் 29 - 2019 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்போம், மூடிய பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்துவோம், அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தேவகோட்டை ஒத்தக்கடை வந்தது. அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் சென்று தியாகிகள் பூங்கா அருகே தமிழ்வழி கல்வி பாதுகாப்பு குறித்த பிரசாரம்… Continue reading தேவகோட்டையில் வாகன பிரச்சாரம்

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

இராமநாதபுரம் | செப் 28 -2019 வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை *********************************************************************** கடந்த 2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட P.கீரந்தை பகுதியை சேர்ந்த சேதுபதி, த/பெ சின்னகுமார், அவரது சகோதரி சண்முகவள்ளி, க/பெ பெருமாள், உறவினர் சப்பாணி, த/பெ இராமையா ஆகியோர் சேர்ந்து சேதுபதியின் மனைவி அங்காள ஈஸ்வரி என்பவரிடம் ரூபாய் 1,00,000/- மற்றும் 10 சவரன் நகை கேட்டு கொடுமைபடுத்தியதுடன் அவரது… Continue reading வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் உள்பட மூவருக்கு சிறை.

புதிய ரக நெல் அறிமுகம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், வலையனேந்தல் கிராமத்தில் இன்று (26.09.2019) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் TDCM-1 Dubraj என்ற புதிய நெல் ரகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளிடம் அறிமுகம் செய்து வைத்து, விதை விதைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொகுப்பு My Thondi.Com Team

விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசியதாவது:– மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான காப்பீடு தொகை பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டுவதில் பெரும் முறைகேடு… Continue reading விவசாயிகளுக்கு 175 கோடி பயிர் இழப்பீடு – மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

இராமநாதபுரம் | செப் 26 - 2019 இராமநாதபுரம் அருகே உள்ள அழகன் குளத்தில் சங்க கால நாகரீகத்தின் 13000 எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. வைகை நதி கடலில் கலக்கும் இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட… Continue reading இராமநாதபுரம் அருகே கீழடியை மிஞ்சும் ஒரு பழைமை நாகரீகம்

நவாஸ் கனி MP யுடன் மத்திய மந்திரி சந்திப்பு

இராமநாதபுரம் | செப் 25 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர சிங் தாமோர் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். சந்திப்பின் போது இராமநாதபுரம் தொகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்கப் பெறவும், விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தும் வண்ணம் புதிய திட்டங்களை வகுக்கவும் வலியுறுத்தினார். தகவல் : MyThondi.Com Team