சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் இன்று (11.10.2019) இரண்டு பயணிகளிடமிருந்து, 973 கிராம் எடையுள்ள ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். கொழும்பிலிருந்து வந்த விமானம் ஒன்றில் பயணம் செய்த சிவக்குமார் பழனியாண்டி என்பவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து 525 கிராம் எடையுள்ள ரூ.19.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கையிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த… Continue reading சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.

BSNL, MTNL ஆகிய நிறுவனங்கள் மூடப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என BSNL நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. BSNL பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில ஊடகங்களில் BSNL நிறுவனம் மூடப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மைக்குப் புறம்பானதாகும். தற்போது நிறுவனத்தின் நிதி நிலையை சரி செய்ய VRS திட்டம் மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய திட்டங்களும், நிறுவனத்தின் அதிக சொத்துக்களை விற்பனை செய்யும்… Continue reading வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். BSNL அறிக்கை.

சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.

சென்னை பெருநகர காவல் - போக்குவரத்து மாற்றம் மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் மாண்புமிகு சீன அதிபர் அவர்களின் சென்னை வருகையை முன்னிட்டு 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11.10.2019 மற்றும்12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை)¸ அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை)¸ சர்தார்… Continue reading சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.

ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

தீபாவளி பண்டிகைக்கு ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் இயக்குவது உள்ளிட்ட ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி MP சந்தித்தார். நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி,… Continue reading ரயில்வே மந்திரியுடன் நவாஸ் கனி MP சந்திப்பு

ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?

திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.இதில் இரண்டு பேர் முகமூடி அணிந்து திருடிய வீடியோக்கள் வெளியாகிய நிலையில் கொள்ளை நடந்த 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை திருவாரூர் பகுதியில் வாகனசோதனையின் போது டூவிலரில் சென்று கொண்டிருந்த இருவரை மறித்த போது மணிகண்டன் என்பவன் பிடிபட்டுள்ளான்.மற்றொரு திருடன் சுரேஸ் தப்பியோடினார். மணிகண்டனை பிடித்த போது அவனிடம் இருந்த மூட்டையில் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. அந்த… Continue reading லலிதா ஜுவல்லரி திருட்டின் பலே கில்லாடி | யார் இந்த திருவாரூர் முருகன் ?

பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

இந்திய துணைக் கண்டத்தோடு இராமேஸ்வரம் தீவை சாலை வழியாக இணைக்கும் பாம்பன் (அன்னை இந்திரா காந்தி) பாலத்திற்கு வயது 32. மண்டபம் - பாம்பன் இடையே உள்ள கடல் மீது சுமார் 2.32 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் விதத்தில் ரூ 19.26 கோடி மதிப்பீட்டில் 72 தூண்களுடன் நிறுவப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். மிகுந்த தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக,… Continue reading பாம்பன் சாலை பாலத்திற்கு வயது 32

செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சோழவந்தான் பகுதியில் கடந்த 23.09.2019-ம் தேதியன்று நடந்து சென்ற இரண்டு பெண்களிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து ரோந்து பணியை தீவிரப்படுத்தினார். குமாரம் பகுதி அருகே கொள்ளையர்கள் பைக்கில் வருவதை அறிந்த காவலர்கள் திரு.மூவேந்தன் மற்றும் திரு.காளிராஜ் ஆகியோர் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய… Continue reading செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டு

கீழடியில் அருங்காட்சியகம்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், "கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, இந்திய… Continue reading கீழடியில் அருங்காட்சியகம்.