ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி ஒரு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு பின்னால் அதற்கு வசூல் செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் தெரிந்தும் அதில் மாட்டிக்கொள்வது தான் நமது மக்களின் பழக்கமாகும். ஜியோ நிறுவனம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முதலில் சிம் கார்டுகளை இலவசமாக கொடுத்தனர். 4G அமைப்புடன் வந்த இந்த சிம் கார்டுகளால் 4G தரம் கொண்ட… Continue reading ஜியோ வைத்த அடுத்த ஆப்பு.

சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.

சென்னை பெருநகர காவல் - போக்குவரத்து மாற்றம் மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் மாண்புமிகு சீன அதிபர் அவர்களின் சென்னை வருகையை முன்னிட்டு 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11.10.2019 மற்றும்12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை)¸ அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை)¸ சர்தார்… Continue reading சென்னையில் போக்குவரத்து மாற்றம் – விபரங்கள்.

ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

2020ம் ஆண்டு ஹஜ் கமிட்டியின் மூலம் ஹஜ் செல்ல விரும்புபவர்கள் நாளை (10-10-2019) முதல் விண்ணப்பிக்கலாம் என ஹஜ் கமிட்டி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.2020 ஹஜ் பயணம் செய்பவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்ஷாஅல்லாஹ்10-10-2019 முதல் 10-11-2019 வரை ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகிறது.இந்த வருடம் 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் விண்ணப்பம் வசதி மட்டுமே உள்ளது. எனவே அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.வழிகாட்டி விபரங்களை http://hajcommittee.gov.in/ என்ற இந்திய ஹஜ் குழு இணைய தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலமாக ஹஜ்… Continue reading ஹஜ் – 2020 நாளை முதல் விண்ணப்பிக்கலாம். – ஹஜ் கமிட்டி

தீவிரவாதத்திற்கு மதமில்லை.

எந்த ஒரு மதத்திற்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை. பெரும்பாலும் அனைத்து தீவிரவாதங்களும் அரசியலுடன் தொடர்புடையவையாகும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். உலகில் வரலாறு நெடுகிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செப்டம்பர் 11 க்கு முன்னர் 75 வீதமான தாக்குதல்களை இந்துக்களான தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். ஆனால் அதற்கு காரணமாக எவரும் இந்து மதத்தை குறிப்பிடவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களைத் தாக்கினர். ஆனால் எவரும்… Continue reading தீவிரவாதத்திற்கு மதமில்லை.

RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக்‌ காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி உரையாற்றினார்.அதில், ‘காந்தியடிகளைத் தவிா்த்து, ஆா்எஸ்எஸ் அமைப்பை இந்தியாவின் அடையாளமாக்க அவா்கள் முயற்சிக்கின்றனா்.இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்களைக் கண்டிருந்தால், காந்தியடிகளின் ஆத்மா சோகத்தில் துடித்திருக்கும்.பொய்ப் பிரசாரங்கள் மூலம் அரசியல் செய்பவா்கள், காந்தியடிகள் உண்மையைக் கடைப்பிடித்தவா் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வாா்கள்? ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் நபா்கள், காந்தியடிகளின் சுயராஜ்ஜியத்தை எவ்வாறு புரிந்து… Continue reading RSS யிடமிருந்து ஜனநாயகத்தைக்‌ காக்க எந்த எந்த எல்லைக்கும் செல்வோம் – சோனியா காந்தி அறைகூவல்

உலகில் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே உள்ளது. – இம்ரான் கான் பேச்சு

எந்த மதத்தையும் தீவிரவாதத்தோடு இணைத்துப் பேசாதீர்கள், உலகில் இஸ்லாம் என்று ஒரு மதம் மட்டுமே இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். ஐ.நா. சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக 7 நாட்கள் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இறுதியாக நேற்று ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சில் பாகிஸ்தான் குறித்து எந்தவிதமான நேரடியான தாக்குதலும்,… Continue reading உலகில் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே உள்ளது. – இம்ரான் கான் பேச்சு

ஹேப்பி பர்த் டே கூகுள்

இணைய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான கூகுள் நிறுவனம் தனது 21 வது பிறந்த நாளை இன்று (27-09-2019) கொண்டாடுகிறது. இதற்கென தனியான டூடுள் படத்தையும் அது வெளியிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கூகுள் நிறுவனம் உலகின் அதிக வருமானம் ஈட்டும் இணைய நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் இணைய தளம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாட்களைக் கொண்டுள்ளது. ஹேப்பி பர்த்டே கூகுள். தொகுப்பு My Thondi.Com Team

மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

இராமநாதபுரம் | செப் 27 ஓமன் நாட்டில் வேலை செய்து வந்த நம்புதாளையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்களான கார்மேகம்(வயது 50), ராமநாதன்(38), கே.காசிநாதன்(36), ஆர்.காசிலிங்கம்(23) ஆகியோர் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஓமன் நாட்டில் மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் 4 பேரும் வழக்கம்போல் கடந்த 16-ந்தேதி பேர் ஒரு படகில் கடலுக்குள்… Continue reading மீன் பிடிக்கச் சென்ற நம்புதாளை மீனவர்கள் மாயம்.

எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.

ஐ.நா சபையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிகரமாக உரை ஆற்றினார் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதிகளை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என சரமாரியாக கேள்வி கேட்டார் கிரேட்டா. யார் இந்த கிரெட்டா ? கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் இயக்கத்தின் பிரதிநிதி. சுவீடன் நாட்டைச் சேர்ந்த இவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு… Continue reading எங்களை வஞ்சித்து விட்டீர்கள் – உலகத் தலைவர்களை விளாசித் தள்ளிய மாணவி.